உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான்

மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடித்த ‛சிக்கந்தர்' படத்தை அடுத்து தற்போது அபூர்வா லக்கியா இயக்கும் ‛பேட்டில் ஆப் கல்வான்' என்ற படத்தில் நடிக்கப் போகிறார் சல்மான்கான். இதையடுத்து மலையாள சினிமாவின் முன்னணி இயக்குனரான மகேஷ் நாராயணன் இயக்கும் ஒரு பீரியட் திரில்லர் படத்தில் நடிக்கப் போகிறார். 1970 முதல் 1990 வரையிலான காலகட்ட கதையில் உருவாகும் இந்த பீரியட் திரில்லர் படத்தின் கதையைக் கேட்டதும் அதில் நடிக்க தான் ஆர்வமாக இருப்பதாக தெரிவித்துள்ளாராம் சல்மான்கான். இதனால் இந்த படத்தின் படப்பிடிப்பை 2026ம் ஆண்டில் தொடங்க திட்டமிட்டுள்ளாராம் மகேஷ் நாராயணன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !