உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக்: கமர்ஷியல் ஆக்ஷன் படம் இயக்கிய விசு

பிளாஷ்பேக்: கமர்ஷியல் ஆக்ஷன் படம் இயக்கிய விசு

பொதுவாக விசு என்றாலே குடும்ப பாங்கான படங்களை எடுப்பவர் என்றுதான் சொல்வோம். அவருடைய எல்லா படங்களும் பக்காவான குடும்ப படங்கள்தான். ஒரே ஒரு படத்தை தவிர, அது 'கெட்டிமேளம்'. படத்தின் தலைப்புதான் கெட்டிமேளமே படம் முழுக்க ஆடல், பாடல், கூத்து கொண்டாட்டம், சண்டைதான்.

ரோஸ் என்கிற தனி தீவு. இந்த தீவின் ராஜா பெரிய சேதுபதி என்கிற டெல்லி கணேஷ். அவரது தம்பியான பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரன் (சின்னசேதுபதி) தீவில் இருக்கிற வாரிசுகளை எல்லாம் நாடு கடத்தி விடுகிறார். தீவை கைப்பற்றி தானே ஆள வேண்டும் என்பது அவரது திட்டம். நாடு கடத்தப்பட்டவர்கள் வளர்ந்து ஆளான பிறகு ஒருவரை ஒருவர் கண்டுபிடித்து எப்படி தீவிற்கு வந்து சேர்கிறார்கள் என்பதுதான் படத்தின் கதை.

கார்த்திக், சுலக்ஷனா, மனோரமா, டிஸ்கோ சாந்தி, சி.எல்.ஆனந்தன், பிரமிளா, பண்டரி பாய் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்தது. படத்தை தலைப்பை பார்த்து விட்டு குடும்ப படம் என்று நம்பி ரசிகர்கள் தியேட்டருக்கு போய் ஏமாந்ததால் படம் வெற்றி பெறவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !