உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஆகஸ்ட் 8ல் 13 படங்கள் வெளியீடா ???

ஆகஸ்ட் 8ல் 13 படங்கள் வெளியீடா ???

2025ம் ஆண்டிலும் வாராவாரம் நான்கைந்து படங்கள் சராசரியாக வெளியாவது தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. கடந்த வாரத்துடன் வெளியான படங்களையும் சேர்த்து இந்த வருடத்தில் இதுவரை வெளிவந்த படங்களின் எண்ணிக்கை 150ஐக் கடந்துவிட்டது.

இந்த வாரம் ஆகஸ்ட் 8ம் தேதி முதலில் ஆறு படங்கள்தான் வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இப்போது 13 படங்கள் வரை வெளியாக உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. “அகதி, பாய், காத்துவாக்குல ஒரு காதல், மாமரம், நாளை நமதே, நெடுமி, நிஷா, ஒரு கைதியின் நாட்குறிப்பு, ராகு கேது, ரெட் பிளவர், தங்க கோட்டை, உழவர் மகன், வானரன்” ஆகிய படங்கள் இந்த வாரம் வெளியாக உள்ளன.

இந்த வருடத்தில் இதுவரையில் ஒரே நாளில் இத்தனை படங்கள் வெளியானதில்லை. கடந்த வாரம் 7 படங்கள் வெளியான நிலையில், இந்த வாரம் 13 படங்கள் வெளியாவது அதிர்ச்சியடைய வைத்துள்ளது. போன வாரம் வெளியான சில படங்கள் தமிழகம் முழுவதிலுமே 10 முதல் 20 தியேட்டர்கள் வரையில்தான் திரையிடப்பட்டுள்ளன. ரசிகர்கள் வராததால் பல படங்களின் காட்சிகள் முதல் நாளிலேயே ரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையை எந்த சங்கமும் கண்டு கொள்ளவில்லை என்பது ஆச்சரியமான ஒன்று.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !