மேலும் செய்திகள்
ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ்
56 days ago
மூக்குத்தி அம்மன்-2 பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு
56 days ago
மலையாளத்தில் வெற்றி பெற்ற படம் ‛ஈ பறக்கும் தளிகா'. தாஹா இயக்கினார். இந்த படம் தமிழில் சுந்தரா டிராவல்ஸ் என்ற பெயரில் ரீ-மேக் ஆனது. தாஹாவே இயக்கினார். முரளி, வடிவேலு, ராதா, வினு சக்கரவர்த்தி, டெல்லி கணேஷ், பி.வாசு உள்ளிட்ட பலர் நடித்தனர். ஒரு பேருந்தை வைத்து காமெடி, கலாட்டாவாக இந்தப்படம் 2002ல் வெளியாகி வெற்றி பெற்றது. இன்றும் அந்த பட காமெடி பேசப்படுகிறது.
இந்நிலையில் இந்த படத்தை ரீ ரிலீஸ் செய்ய இந்த ஆண்டு முயற்சிகள் நடந்தன. மே மாதம் ரிலீஸ் என சொல்லப்பட்டது. ஆனால் சில சிக்கல் காரணமாக படம் ரிலீஸ் ஆகவில்லை. இப்போது ஆகஸ்ட் 8, நாளை மறுநாள் படம் ரிலீஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது. 23 ஆண்டுகள் கழித்து இந்த படம் ரீ-ரிலீஸ் ஆகிறது. ஆனால் இதுவரை படம் குறித்து வடிவேலு பேசவில்லை.
56 days ago
56 days ago