உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / இதைவிட பெருமை என்ன இருக்கு : முதல்வர் சந்திப்பு குறித்து நடிகை எம்.என்.ராஜம் நெகிழ்ச்சி

இதைவிட பெருமை என்ன இருக்கு : முதல்வர் சந்திப்பு குறித்து நடிகை எம்.என்.ராஜம் நெகிழ்ச்சி

பழம்பெரும் நடிகை எம்.என்.ராஜம் தனது 90வது பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலினை சந்திக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்து இருந்தார். அவர் வேண்டுகோளை ஏற்று மறுநாளே, அதாவது நேற்று சென்னையில் உள்ள அவர் வீட்டுக்கு சென்றார் முதல்வர். இந்த சந்திப்பு 20 நிமிடங்கள் நீடித்தது. முதல்வர் என்ன பேசினார் என்று எம்.என்.ராஜம் கூறியிருக்கிறார்.

அதில், ‛‛நான் கருணாநிதி வசனங்களில் நடித்தவள். சின்ன வயதில் இருந்தே முதல்வரை தெரியும். அவர் முதல்வர் ஆன பின் பார்க்கவில்லை என்று கூறியிருந்தேன். உடனே வந்துவிட்டார். அவர் என்னிடம் நிறைய பேசினார், நலம் விசாரித்தார். நான் அதிகம் பேசவில்லை, அவர் முகத்தையே பார்த்துக் கொண்டு இருந்தேன். நான் பார்த்திட்டேன் அய்யா, ஆகட்டுமய்யா, நல்லதுய்யா என சொல்லிக் கொண்டு இருந்தேன். நானும் அவரிடம் எந்த உதவியும் கேட்கவில்லை. என்ன பேசினார் என்று என்னால் சொல்லி தெரியாது, அப்படி லயிச்சுபோய் அவரை பார்த்தேன். அவரும் உதவி தேவையா என்று கேட்கவில்லை. இந்த சந்திப்பு மறக்க முடியாததது. இந்தநாட்டு மக்களை அவரை பார்த்துக்கொண்டு இருக்கிறார். அவர் என்னை பார்க்க வந்தார். இது எனக்கு பெருமை. இது கடவுள் அனுக்கிரகம். இதைவிட வேறு பெருமை என்ன வேண்டும்'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !