உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நீங்க எனக்கு இன்ஸ்பிரேசன் : சிம்ரனை பாராட்டிய திரிஷா

நீங்க எனக்கு இன்ஸ்பிரேசன் : சிம்ரனை பாராட்டிய திரிஷா

சசிகுமார், சிம்ரன் நடித்த டூரிஸ்ட் பேமிலி படத்தை கொஞ்சம் லேட்டாக பார்த்து இருக்கிறார் நடிகை திரிஷா. ஆனாலும் படத்தை பாராட்ட தவறவில்லை. படம் குறித்து என்ன ஒரு படம், என்ன மாதிரியான நடிப்பு என சசிகுமார் மற்றும் சிம்ரனின் நடிப்பைப் புகழ்ந்துள்ளார். தாமதமாகப் பார்த்தாலும், படம் மிக அருமையாக இருந்தது. நல்ல உள்ளம் கொண்டவர்களுக்கு மட்டுமே நல்லது நடக்கும் என்ற வாசகத்தை ஹைலைட்டாக குறிப்பிட்டுள்ளார். படத்தில் நடித்த எம்.எஸ்.பாஸ்கர், குமரவேல், பகவதி, குழந்தை நட்சத்திரம் கமலேசை மற்றும் இயக்குனர் அபிஷன் ஜீவிந்தையும் மனம் திறந்து பாராட்டி இருக்கிறார். நான் சந்தித்த நாள் முதல் சிம்ரன் என் இன்ஸ்பிரேசன் எனவும் கூறியுள்ளார்.

மெளனம் பேசியதே படத்தில் திரிஷா நாயகியாக அறிமுகம் ஆனாலும், அவர் சிம்ரன் தோழியாக சின்ன வேடத்தில் ஜோடி படத்தில் தான் முதன்முதலில் திரையில் தோன்றினார். அந்த நட்பு, பாசம் அடிப்படையில் சிம்ரனை இப்படி பாராட்டியிருக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !