தமிழ்நாடு தி பியுட்டி : சோபிதாவின் டூர் டைரி
ADDED : 55 days ago
'பொன்னியின் செல்வன்' பட நடிகையும், நாகசைதன்யாவின் மனைவியான சோபிதா துலிபலா அவரது தோழி ஒருவரின் திருமணத்திற்காக தமிழகம் வந்துள்ளார். வேளாங்கண்ணி மாதா கோவில், நாகூர் தர்கா, குரு பௌர்ணமி ஆகிய வழிபாடுகளை நடத்தி அவற்றின் புகைப்படங்களை 'தமிழ்நாடு தி பியுட்டி' என்று குறிப்பிட்டு 'சமீபத்திய வாழ்க்கை' என்று பதிவிட்டுள்ளார்.
பொன்னியின் செல்வன் படத்திற்குப் பிறகு தமிழில் அவர் எந்தப் படத்திலும் நடிக்கவில்லை. நாகசைதன்யா உடன் சில ஆண்டுகளாக காதல் கிசுகிசுக்கப்பட்டவர் கடந்தாண்டு அவரைத் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு நடிப்பதை நிறுத்திவிட்டாரா அல்லது அவருக்கான பொருத்தமான வாய்ப்புகள் வரவில்லை என்பதால் தவிர்க்கிறாரா என்று தெரியவில்லை.