மேலும் செய்திகள்
ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ்
54 days ago
மூக்குத்தி அம்மன்-2 பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு
54 days ago
தமிழ் சினிமாவில் லைட்மேன் வேலையில் ஆரம்பித்து, சிறிய வேடங்களில் நடித்து, நகைச்சுவை நடிகராக உயர்ந்து, தற்போது நாயகனாகவும் ஜொலித்துக் கொண்டிருப்பவர் சூரி. அவர் நடித்து சமீபத்தில் வெளிவந்த 'மாமன்' படமும் வியாபார ரீதியாக வெற்றி பெற்று அவருக்கு ஒரு தனித்த வெற்றியைப் பெற்றுத் தந்தது. அப்படத்தில் சூரிக்கு ஜோடியாக 'பொன்னியின் செல்வன்' நடிகை ஐஸ்வர்ய லெட்சுமி நடித்திருந்தார்.
சில தினங்களுக்கு முன்பு சூரியின் சொந்த ஊருக்குச் சென்று அவரது குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட்டுள்ளார் ஐஸ்வர்யா. அவர்கள் ஊர், குலதெய்வக் கோயில், உற்றார், உறவினர், நண்பர்கள் என அனைவருடனும் கலந்துரையாடி மகிழ்ந்துள்ளார்.
அது குறித்து தமிழிலேயே அவர் பதிவிட்டுள்ளதாவது…
“நான் அந்த நாளில் உணர்ந்த அன்புக்கு, அங்கீகாரத்திற்கு, என்னை உங்களோடு சேர்ந்திருப்பதுபோல் உணர்த்தியதற்காக நான் பதிலுக்கு என்ன செய்ய முடியும் என தெரியவில்லை. சூரி சார், எந்த ஒரு பெண்ணும் நம்ப விரும்பும் ஒரு நல்ல மனிதராக நீங்கள் இருப்பதற்கு நன்றி. ராஜாக்கூருக்கு என்னை அழைத்து, உங்கள் கிராமத்தின் மகிழ்ச்சியில் பங்கெடுக்க அனுமதித்ததற்காக நன்றி.
மதுரை எனக்கு இப்போது இன்னும் அதிக மகிழ்ச்சியைத் தருகிறது - மீனாட்சி அம்மன் அங்கே இருப்பதனால் மட்டும் அல்ல, நீங்கள் என்னை உங்கள் அழகான குடும்பத்தின் ஒரு பகுதியாக ஏற்றுக்கொண்டதினாலும். நீங்கள் எனக்கு காட்டிய அன்பு அனைத்தும் மிக அழகாகவும், மனதைக் கலங்கவைக்கும் வகையிலும் இருக்கிறது. சிறியக் குடும்பத்தில் வளர்ந்த என்னைப் போன்ற ஒருவருக்கு, இது இதயத்திற்கு நெருக்கமானது தான். இந்த அளவு அன்பு உணர முடியும் என நான் நினைத்ததே இல்லை,” என்று குறிப்பிட்டுள்ளார்.
54 days ago
54 days ago