மேலும் செய்திகள்
ஓவியா எங்கே? ஓவியாவுக்கு என்னாச்சு?
51 days ago
பிரபாஸ் படத்தில் இணையும் பிரேமம் பட நாயகி
51 days ago
இட்லி கடை, காந்தாரா 2 ஜெயிப்பது யார்?
51 days ago
தெலுங்கு திரையுலகில் தற்போது நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் முக்கிய நடிகர் மகேஷ் பாபு. பிரபல நடிகர் கிருஷ்ணாவின் மகனாக, ஒரு வாரிசு நடிகராக சினிமாவில் நுழைந்தாலும் தனது திறமையால் முன்னணி இடத்திற்கு உயர்ந்தவர் மகேஷ்பாபு. குறிப்பாக இப்போது வரை ஆக்சன் ரூட்டை விட்டு நகராமல் தொடர்ந்து அதில் பயணித்து வருகிறார். அவரது 39வது படமாக தற்போது ராஜமவுலி இயக்கத்தில் நடித்து வருகிறார். இன்று அவர் தனது ஐம்பதாவது பிறந்தநாளை தொட்டுள்ளார். வயது தான் 50 ஆகிறதே தவிர நாளுக்கு நாள் ஒரு கல்லூரி மாணவரின் தோற்றத்திற்கே மாறிக் கொண்டிருக்கும் மகேஷ் பாபு குறித்து தனது பிறந்த நாள் வாழ்த்துத் செய்தியில் அதே கருத்தை வைத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நடிகர் சிரஞ்சீவி இது குறித்து சிரஞ்சீவி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “நீங்கள் தெலுங்கு சினிமாவின் பெருமை. எல்லைகளுக்கு அப்பால் வெற்றிகளை பெற தீர்மானிக்கப்பட்டவர். ஒவ்வொரு வருடமும் கடந்து செல்லும்போது இன்னும் இளமையாகிக் கொண்டு செல்கிறீர்கள். இந்த வருடம் உங்களுக்கு மிக அற்புதமான ஒன்றாக அமையட்டும்” என்று வாழ்த்தி உள்ளார்.
நடிகர் ஜூனியர் என்டிஆரும் வாழ்த்தும்போது, “பிறந்தநாள் வாழ்த்துகள் மகேஷ் பாபு அண்ணா.. உங்களது வெற்றிக்காக அன்புடன் வாழ்த்துகிறேன்” என்று கூறியுள்ளார். இதேபோல பல தெலுங்கு திரையுலக பிரபலங்களும் மகேஷ் பாபு தங்களது பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
51 days ago
51 days ago
51 days ago