மேலும் செய்திகள்
ஓவியா எங்கே? ஓவியாவுக்கு என்னாச்சு?
51 days ago
பிரபாஸ் படத்தில் இணையும் பிரேமம் பட நாயகி
51 days ago
இட்லி கடை, காந்தாரா 2 ஜெயிப்பது யார்?
51 days ago
மும்பையை பூர்வீகமாகக் கொண்டவர் மெழுகு சிலை போன்ற தோற்றத்திற்கு சொந்தக்காரரான இஷா தல்வார். 2012ல் தேசிய விருதுகளை பெற்ற 'தட்டத்தின் மறயத்து' என்கிற மலையாள படத்தின் மூலம் அறிமுகமான இவர் அதன் பிறகு மலையாளம், தமிழ், தெலுங்கு என கொஞ்ச நாள் பிஸியாக நடித்து வந்தார், தற்போது இவருக்கு வாய்ப்புகள் குறைந்துள்ள நிலையில் சமீபத்தில் அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் ஹிந்தியில் தனது முதல் பட ஆடிசனுக்காக தான் சந்தித்த ஒரு கசப்பான அனுபவத்தை பகிர்ந்து கொண்டுள்ளார்.
இது குறித்து அவர் கூறும்போது, “நான் நடிக்க இருந்த படத்தின் ஆடிசனுக்காக என்னை வர சொன்னார்கள். ஆனால் என்னை ஆடிசன் செய்ய அவர்கள் தேர்ந்தெடுத்திருந்த இடம் நாலு பேர் இருக்கும் தனி அறை அல்ல.. கிட்டத்தட்ட 1௦௦ பேர் அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருக்கும் ஒரு ரெஸ்டாரண்டில், என்னை ஒரு டேபிளில் அமர வைத்து திடீரென்று அங்கே கதறி அழுதபடி ஒரு வசனத்தை பேச சொல்லி சொன்னார்கள். அப்போதுதான் நடிக்க வாய்ப்பு தேடி வந்த எனக்கு அவர்களது செயல் என் தன்னம்பிக்கையை அப்படியே குறைக்கும் விதமாக இருந்தது. என்னால் அப்படி செய்ய முடியாது என்று கூறிவிட்டேன்.
அதன்பிறகு எனக்கு அந்த படத்தில் வாய்ப்பு கிடைக்கவில்லை. தனி ரூமில் ஆடிஷன் செய்து நடித்துக் காட்டுவதை நிச்சயமாக என்னால் படப்பிடிப்பில் பலபேர் முன்னிலையில் செய்து காட்ட முடியும் என்கிற நம்பிக்கை இருக்கிறது. அப்படி உங்களுக்கு அந்த நம்பிக்கை இல்லை என்றால் நிஜமாகவே இதுபோல 100 துணை நடிகர்களை வைத்து அங்கே ஆடிஷன் செய்ய வேண்டுமே தவிர இதுபோன்று பொதுவெளியில் ஆடிசன் செய்வது ரொம்பவே மலிவான எண்ணம். எப்போதும் புதியவர்களை கவுரவமாக நடத்துங்கள்” என்று கூறினார்.
51 days ago
51 days ago
51 days ago