மேலும் செய்திகள்
மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா
53 days ago
மந்திரி பதவி கேட்கும் நடிகர் பாலகிருஷ்ணா ?
53 days ago
போலீஸ் அதிகாரியாக அஞ்சு குரியன்
53 days ago
இணையதள தேடல் : தீபிகா படுகோன்
53 days ago
ரஜினிகாந்த் நடித்த கூலி படம் ரிலீஸ் ஆக இன்றுடன் சேர்த்து 3 நாட்களே இருக்கிறது. கூலி குறித்து பல்வேறு தகவல்கள் கோலிவுட்டில் உலா வருகின்றன. அதில் முக்கியமானது கூலி வியாபாரம் குறித்த பேச்சுகள்தான். இப்போதே, அதாவது படம் ரிலீஸ் ஆவதற்குமுன்பே கூலி படம் 200 கோடி அளவுக்கு லாபத்தை சம்பாதித்துக் கொடுத்துள்ளதாம். அந்த படத்தின் மொத்த செலவு 375 கோடி என்றும் ஆனால், வியாபாரம் 575 கோடி அளவுக்கு நடந்துள்ளதாம். இதில் முன்னே பின்னே தொகை மாறலாம். ஆனால், 200 கோடி அளவுக்கு லாபம் என்பதில் சந்தேகம் இல்லை.
தமிழ் சினிமா சரித்திரத்தில் ரஜினிக்கு மட்டுமே இந்த சாதனை நடந்துள்ளது. படம் வெற்றி பெற்றால் இந்த லாபம் அதிகரிக்கும். கூலி படத்தின் டிக்கெட் புக்கிங் நன்றாக இருக்கிறது. உலகளவில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக தியேட்டரில் படம் ரிலீஸ் ஆகிறது. ஆகவே, படம் ஓரளவு ஓடினாலே ஆயிரம் கோடி என்ற இலக்கை எட்டி, தமிழில் ஆயிரம் கோடி வசூலித்த முதல் படம் என்ற இடத்தை பெற வாய்ப்புள்ளது. படத்தின் ரிசல்ட்டை பொறுத்து அடுத்த திங்கள் கிழமை இதற்கான முடிவு தெரிய வரும் என்கிறார்கள்.
தமிழ் தவிர, தெலுங்கு, ஹிந்தி, வெளிநாடுகளிலும் நல்ல வரவேற்பை பெற்றால் ஆயிரம் கோடி சாத்தியம் என்கிறார்கள். இதற்கிடையே, நீங்க பேட்டி கொடுக்க வேண்டாம். சில தனியார் யு-டியூப் சேனல்களுக்கு கொடுத்த பேட்டி எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்துகிறது. படம் ரிலீஸ் ஆனபின் பேட்டி கொடுங்க என்று இயக்குனர் லோகேஷ்கனகராஜிற்கு பட நிறுவனம் வாய்ப்பூட்டு போட்டுவிட்டதாம். லியோ நிறைய எதிர்மறை விமர்சனங்களை சந்தித்ததால் கூலியை வெற்றி பெற வைக்க வேண்டும் என்று கூடுதலாக தவிக்கிறாராம். சமீபத்தில் பட வெற்றிக்காக திருவண்ணாமலை சென்று சிவனை தரிசித்துள்ளார்.
53 days ago
53 days ago
53 days ago
53 days ago