உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சின்னத்திரை நடிகர் சங்க தலைவராக பரத் தேர்வு

சின்னத்திரை நடிகர் சங்க தலைவராக பரத் தேர்வு

சென்னை : சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தலில் நடிகர் பரத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

தமிழ் சின்னத்திரை நடிகர் சங்கத்தில் 2000 பேர் வரை உறுப்பினர்களாக உள்ளனர். இதன் சிவன் சீனிவாசன் தலைவராகவும், போஸ் வெங்கட் செயலராகவும் இருந்து வந்த நிலையில், அவர்களின் பதவி காலம் முடிந்ததால், தேர்தல் அறிவிக்கப்பட்டது. தலைவர், செயலர், பொருளாளர் பதவி உட்பட 23 பதவிகளுக்கு, மூன்று அணிகள் சார்பில், 69 பேர் போட்டியிட்டனர்.

நேற்று ஓட்டுப்பதிவு நடந்தது. சங்க உறுப்பினர்கள் ஆர்வமுடன் ஓட்டளித்தனர். மொத்தம் 936 ஓட்டுகள் பதிவாகின. ஓட்டுப்பதிவு முடிந்ததும், பதிவான ஓட்டுகள் எண்ணப்பட்டன. இதில் சங்கத் தலைவராக பரத் தேர்வு செய்யப்பட்டார். அவர் 491 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். அவருடன் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட சிவன் சீனிவாசன் 222, தினேஷ் 175, ஆர்த்தி 33 ஓட்டுகள் பெற்றனர். பொதுச்செயலராக நடிகர் நவீந்தர் வெற்றி பெற்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !