உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சீக்கிரம் சசி உடன் மீண்டும் ஒரு படம் : விஜய் ஆண்டனி

சீக்கிரம் சசி உடன் மீண்டும் ஒரு படம் : விஜய் ஆண்டனி

‛அருவி' புகழ் அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி அவரது 25வது படமாக நடித்துள்ள படம் 'சக்தி திருமகன்'. இப்படம் வருகின்ற செப்டம்பர் 5ம் தேதியன்று திரைக்கு வருகிறது. இந்நிலையில் விஜய் ஆண்டனி அளித்த பேட்டி ஒன்றில் கூறியதாவது, இயக்குனர் சசி என்னிடம் 'பிச்சைக்காரன்' படத்தின் கதையைக் கூறும்போதே கண்களில் நீர் தேங்கியது. அந்தப் படம் சோகமான கதை இல்லை தான். ஆனால், மிகவும் உணர்வுபூர்வமானது. இந்த உணர்வை எனக்கு மீண்டும் ஏற்படுத்தும்படியான இன்னொரு கதையை சசி என்னிடம் கூறியுள்ளார். எங்கள் கூட்டணியில் அந்தப் படம் சீக்கிரம் உருவாகும் என தெரிவித்துள்ளார்.

விஜய் ஆண்டனிக்கு நடிகராக திருப்புமுனையை தந்த படம் பிச்சைக்காரன். அந்தப்படம் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கிலும் வெற்றி பெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !