உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தமிழில் ஒரு ரவுண்ட் வருவாரா கெட்டிகா ஷர்மா...

தமிழில் ஒரு ரவுண்ட் வருவாரா கெட்டிகா ஷர்மா...

தெலுங்கு சினிமாவில் பிரபலமாக நடித்து வருபவர் நடிகை கெட்டிகா ஷர்மா. ‛ரொமான்ட்டிக், லக் ஷயா' உள்ளிட்ட படங்களில் நடித்தார். ‛ராபின்ஹூட்' என்ற படத்தில் இவர் ஆடிய ஆட்டத்தை தெலுங்கு ரசிகர்கள் அவ்வளவு எளிதில் யாரும் மறக்க மாட்டார்கள். ஹிந்தியிலும் ஓரிரு படங்களில் நடித்துள்ள இவர் அடுத்தப்படியாக தமிழில் களமிறங்குகிறார்.

சமீபத்தில் ராஜேஷ் எம் செல்வம் இயக்கும் ஒரு படத்தில் இவர் நாயகியாக நடிக்க போவதாக தகவல் வந்தது. தமிழில் இவர் நடிக்கும் முதல்படம் இதுவாகும். இதுதவிர கார்த்திக் நடிக்க உள்ள புதிய படத்திலும் இவரை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடக்கிறது. மேலும் இரண்டு, மூன்று பட வாய்ப்புகளும் வருகிறதாம். இதோடு ஒரு பாட்டுக்கு ஆடவும் இவரை தேடிய நிறைய வாய்ப்புகள் வருகிறது. இதனால் தமிழில் இவர் ஒரு ரவுண்ட் வருவார் என எதிர்பார்க்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !