ரித்விகா திருமணம் திடீரென தள்ளிவைப்பு
ADDED : 46 days ago
‛பரதேசி, மெட்ராஸ், கபாலி' உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் ரித்விகா. பெரும்பாலும் குணச்சித்ர வேடங்களில் நடித்து வரும் இவர் பிக்பாஸ் போட்டியிலும் பங்கேற்று வெற்றி பெற்றார். தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். கடந்தமாதம் இவருக்கும், வினோத் லட்சுமணன் என்பவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இது பெற்றோர் பார்த்து முடிவு செய்த திருமணமாகும்.
அடுத்தவாரம் ஆக., 27ல் இவர்களின் திருமணம் சென்னையில் நடப்பதாக இருந்தது. பலருக்கும் அழைப்பிதழ் கொடுத்த நிலையில் திடீரென தனது திருமணம் தள்ளி வைக்கப்படுவதாக ரித்விகா அறிவித்துள்ளார். என்ன காரணம் என அவர் கூறவில்லை. ஓரிரு நாளில் இதற்கான காரணத்தை அவரே வெளியிடுவார் என எதிர்பார்க்கலாம்.