உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ரஜினிகாந்த் 50 : விழா நடத்துமா தமிழ்த் திரையுலகம்?

ரஜினிகாந்த் 50 : விழா நடத்துமா தமிழ்த் திரையுலகம்?

தமிழ் சினிமாவை வியாபார ரீதியாக தமிழகத்தை விட்டு வெளி மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் கொண்டு சென்றவர் நடிகர் ரஜினிகாந்த். அவர் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி 50 வருடங்கள் நிறைவடைந்துள்ளது.

முதல் படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் அறிமுகமாகி, பின்னர் வில்லனாக நடித்து, கதாநாயகனாக உயர்ந்து, சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்தில் கடந்த பல ஆண்டுகளாக தமிழ் சினிமாவை ஆண்டு வருகிறார். அவரது வழியைப் பின்பற்றி சில நடிகர்களும் தங்களை சூப்பர் ஸ்டார் ஆக்கிக் கொள்ள எவ்வளவோ முயன்று வருகிறார்கள். அதில் சிலர் தோற்றுப் போய் சினிமாவிலிருதே ஓய்வெடுத்து விட்டார்கள். இப்போதும் அவருடைய சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு ஆசைப்படும் நடிகர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

தமிழ் சினிமாவில் அதிக வசூலைக் குவித்த படம், தமிழ் சினிமாவின் முதல் 100 கோடி படம் என அவருடைய வசூல் சாதனைகள் பட்டியலிடும் அளவிற்கு உள்ளது. தமிழ் தவிர தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி மொழிகளிலும் நடித்துள்ளவர்.

இப்போதும் கூட அவருடைய நடிப்பு குழந்தைகளைக் கவரும் விதத்தில் உள்ளது. அப்படி ஒரு வசீகரம் தமிழ் சினிமாவில் வேறு யாருக்கும் கிடையாது. அப்படிப்பட்ட ஒருவருடைய 50 வருட சினிமா வாழ்க்கையை எப்படிக் கொண்டாட வேண்டும்.

ஆனால், தமிழ் சினிமாவில் உள்ள சில நடிகர்கள் மட்டும் வாழ்த்துகளுடன் அதை முடித்துக் கொண்டார்கள். மலையாள நடிகர்கள் இன்னும் சில மொழி நடிகர்கள் வாழ்த்து தெரிவித்திருந்தார்கள். வழக்கம் போல தமிழ் சினிமாவில் உள்ள நடிகைகள் அதை கண்டு கொள்ளவேயில்லை.

அரசியல் பிரபலங்கள் பலரும், எண்ணற்ற ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து அவரைப் பாராட்டினார்கள்.

அந்த பாராட்டு மட்டும் அவருக்குப் போதுமா?. தென்னிந்திய நடிகர் சங்கம், மற்ற சங்கங்கள் ஒன்றிணைந்து அவருக்கு மற்ற திரையுலகம் வியக்கும் அளவிற்கு ஒரு பாராட்டு விழா நடத்த வேண்டாமா ?.

அப்படி அவர்கள் செய்ய முன்வரவில்லை என்றால் ரஜினி ரசிகர்களே ஒன்றிணைந்து ஒரு பாராட்டு விழாவை நடத்த முன் வர வேண்டும். செய்வார்களா ?.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் (4)

Kasiraj Rajkumar
2025-08-22 23:51:31

Kandippa pannanum. He deserves the big event


சேகர்
2025-08-22 20:32:16

விஜய் இதை அரசியல் ஆதாயத்துக்காவாவது செய்யலாம்.


kuna
2025-08-22 18:08:41

ஏன் இவ்வளவு சிம்பு அடிக்கிற நீ நடத்தவேண்டியது தானே? இல்ல டலீவரு பணம் கொடுத்து நடத்தவேண்டிய தானே? எல்லாமே ஓசியில் ஊ....


babu
2025-08-22 16:57:49

150 கோடி கேட்பார்