இணைந்து நடிக்கும் தாயும், மகளும்
ADDED : 46 days ago
ஜே.எஸ்.சதீஷ் குமார் தயாரித்த வெற்றிப் படமான 'குற்றம் கடிதல்' படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி வருகிறது. இதில் தயாரிப்பாளர் சதீஷ்குமார் கதையின் நாயகனாக நடிக்கிறார், ஒரு ஓய்வு பெற்ற நல்லாசிரியருக்கு வரும் பிரச்னைகள்தான் படம். இந்த படத்தில் குணச்சித்ர நடிகை விஜி சந்திரசேகரும், அவரது மகன் லவ்லின் சந்திரசேகரும் இணைந்து நடிக்கிறார்கள்.
இவர்கள் தவிர பாண்டியராஜன், அப்புக்குட்டி, பாலாஜி முருகதாஸ், தீபக், பவல், பட்மன், பி.எல்.தேனப்பன், சாந்தினி தமிழரசன், கீர்த்தி சாவ்லா, ஜோவிதா லிவிங்ஸ்டன், ரோஷன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். எஸ்.கே.ஜீவா இயக்குகிறார். கொடைக்கானலில் முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பு தென்காசி, சிறுமலை மற்றும் கேரளா பகுதிகளில் நடக்க இருக்கிறது.