உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 48 வயதில் கன்றாவியான ரிலேஷன்ஷிப் : மீண்டும் ஒரு ஏமாற்றத்தில் புலம்பிய சுசித்ரா

48 வயதில் கன்றாவியான ரிலேஷன்ஷிப் : மீண்டும் ஒரு ஏமாற்றத்தில் புலம்பிய சுசித்ரா

தமிழில் பிரபல பின்னணி பாடகியாக இருந்தவர் சுசித்ரா. ‛யாரடி நீ மோகினி' உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகர் கார்த்திக் குமாரை காதலித்து மணந்தார். சில ஆண்டுகளுக்கு முன் சுச்சி லீக்ஸ் விவகாரத்தில் சிக்கினார் சுசித்ரா. இதில் அவரது வாழ்க்கையே தலைகீழானது. கணவர் பிரிந்து சென்றார். சினிமா வாய்ப்பு போனது. சிலகாலம் மன அழுத்தத்தில் தவித்து வந்து பின்னர் அதிலிருந்து மீண்டார். அவ்வப்போது பிரபலங்கள் பற்றி சர்ச்சைக்குரிய விஷயங்களில் சிக்கி பரபரப்பானார். கடைசியாக மும்பையில் ஒரு நிறுவனத்தில் வேலை பார்ப்பதாக தெரிவித்திருந்தார்.

கன்றாவியான ரிலேஷன்ஷிப்
இந்நிலையில் தற்போது தனது வாழ்வில் வந்த இரண்டாவது காதல் மற்றும் அதனால் வந்த பிரச்னைகளை வீடியோவாக வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது... ‛‛சுச்சி லீக்ஸ் என்ற தர்த்திரம் புடிச்ச விஷயம் என் வாழ்க்கையில் நடந்த பின் இனி அதை விட பெரிய விஷயம் எதுவும் நடக்காது என நினைத்தேன். ஆனால் அதை விட ஒன்னு நடந்துருச்சு. கடந்த இரண்டரை ஆண்டுகளாக நான் ஒருவரை காதலித்தேன். எனது 48 வயதில் கன்றாவியான ஒரு ரிலேஷன்ஷிப்பில் நான் போய் மாட்டிக்கிட்டேன். என் வாழ்வில் எதெல்லாம் நடக்க கூடாது என நினைத்தேனோ அது எல்லாமும் நடந்தது.

அவர் பெயர் சண்முகராஜன். நான் அவரை திருமணம் செய்ததாக கூட ஒரு பேட்டியில் கூறினேன். காரணம் அந்தசமயம் எங்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்து இருந்தது. என் வாழ்க்கையை காப்பாற்றுவது போல் என் வாழ்வில் வந்தார். தனுஷ் உன் வாழ்க்கையை கெடுத்துவிட்டான். நானும் என் வாழ்வில் நிறைய அடிபட்டு இருக்கேன். முதல் மனைவியால் நிறைய கஷ்டப்பட்டேன். இனி உனக்கு நான், எனக்கு நீ என இருப்போம் என ஆறுதல் வார்த்தைகளை கூறியதால் அதை நம்பி நானும் காதலித்தேன். என் பணத்தை எல்லாம் அவரிடம் கொடுத்தேன். ஆனால் தினமும் என்னை அடித்து, மிதித்து, துன்புறுத்தி கொடுமைப்படுத்தினான். தனது முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டதாக கூறினான். ஆனால் அவனது மனைவி என் வீட்டிற்கு வந்து என் கணவரை என்னிடம் கொடுத்து விடு என கெஞ்சினார். அவனை உண்மையாக காதலித்தேன். ஆனால் என் பணத்தை கொஞ்சம் கொஞ்சமாக சுருட்டிவிட்டான். அது எவ்வளவு பணம் என்று சொன்னால் தலை சுற்றிவிடும்.

இப்போது நான் தெளிவாகி விட்டேன். சண்முகராஜன் மீது வழக்கு போட்டுள்ளேன். அவனிடமிருந்து மொத்த பணத்தையும் ஒரு பைசா கூட விடாமல் வாங்கிவிட்டு தான் விடுவேன். இன்னும் இரண்டு வாரத்தில் அந்த வழக்கு விசாரணைக்கு வர இருக்கிறது. இனி என்னை அடிக்கடி நீதிமன்றத்தில் சந்திக்கலாம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் (5)

Anand, chennai
2025-08-28 11:08:01

ஹஹஹஹஹ சூப்பர்.


MUTHU, Sivakasi
2025-08-27 20:07:14

இந்த மாதிரி கருமாந்திர கேஸ்களை விசாரிக்கத்தான் நம்ம கோர்ட்டுக்கள் இருக்குதாக்கும்.


Premanathan S, Cuddalore
2025-08-27 13:25:09

வீணா போன பொம்புள்ள எவ்வளவு பட்டும் திருந்தாத கேசு


தமிழ் நாட்டு அறிவாளி, Chennai
2025-08-27 13:21:52

வாழ்க்கையில் நமக்கு சனி பிடிக்க கூடாது, இல்லை சனி புடிச்சவன் கூட நாம இருக்க கூடாது


Premanathan S, Cuddalore
2025-08-27 20:32:16

உண்மைதான்