உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஓடிடியில் இந்தவாரம் ரிலீஸ் என்ன...

ஓடிடியில் இந்தவாரம் ரிலீஸ் என்ன...

வாரந்தோறும் இல்லங்களை ஆக்கிரமிக்கும் ஓடிடி ரிலீஸ்களுக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. அந்த வகையில் இன்று முதல் இந்த வாரம் முழுவதும் ரசிகர்களை குஷிப்படுத்தும் விதமாக வெளியாகியுள்ள புதிய திரைப்படங்கள் குறித்துத் தெரிந்து கொள்ளலாம்.

கிங்டம்
தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளிவந்த திரைப்படம் 'கிங்டம்'. தெலுங்கு இயக்குநர் கவுதம் தின்னனூரி இயக்கி உள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து இருந்தார். இப்படம் ஆக.27 முதல் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆகி வருகிறது.

கம்மட்டம்
சுதேவ் நாயர் நடிக்கும் மலையாள குற்றத் தொடரான 'கம்மட்டம்'. மலையாள ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கி வருகிறது. ஷான் துளசிதரன் இயக்கி இருந்தார். நிதித் திட்டங்களின் சிக்கல்களை ஆராயும் ஒரு மர்ம குற்றத் திரில்லர் கதைக்களமாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த வெப்தொடர் இன்று ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.

லவ் மேரேஜ்
நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் புதுமுக இயக்குநர் சண்முக பிரியன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் 'லவ் மேரேஜ்'. இந்த திரைப்படத்தில் சத்யராஜ் சிறப்பு தோற்றத்தில் நடித்து இருந்தார். ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்ற இந்த திரைப்படம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் இன்று(ஆக.29) வெளியாகியுள்ளது.

மாயக்கூத்து
மாயக்கூத்து' திரைப்படம் ஆகஸ்ட் 27, 2025 அன்று சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் தமிழ் மொழியில் வெளியாகியுள்ளது. 2025 ஜூலை மாதம் திரையரங்குகளில் வெளியான இந்தப் படம், தற்போது ஓடிடி ரசிகர்களுக்காக இந்த தளத்தில் கிடைக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !