உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / இரண்டே முக்கால் மணி நேரம் ஓடும் 'மதராஸி'

இரண்டே முக்கால் மணி நேரம் ஓடும் 'மதராஸி'

ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், சிவகார்த்திகேயன், ருக்மணி வசந்த் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள 'மதராஸி' படம் செப்டம்பர் 5ம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்திற்கு சில தினங்களுக்கு முன்பு தணிக்கை முடிந்து 'யு-ஏ 16+' தணிக்கை வழங்கப்பட்டுள்ளது.

படம் ஓடும் நேரம் 2 மணி நேரம் 47 நிமிடங்கள். சமீப காலங்களில் முன்னணி நடிகர்களின் படங்கள் இரண்டரை மணி நேரத்திற்கும் மேலாக ஓடும் அளவிற்கு உள்ளது. இது படம் பார்க்கும் ரசிகர்களின் பொறுமையை சற்றே சோதிப்பதாக உள்ளது. இருந்தாலும் இயக்குனர்கள் அது பற்றி கண்டு கொள்வதில்லை.

படம் நன்றாக இருந்துவிட்டால் பிரச்னையில்லை, அதுவே படம் போரடித்தால் அந்த நீளமே படத்திற்கு நெகட்டிவ்வாக அமைந்துவிடும். 'மதராஸி' படத்திற்கு படத்தின் நீளம் எப்படி அமையப் போகிறது என்பது நான்கு நாட்களில் தெரிந்துவிடும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !