உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சினிமாவில் பாலகிருஷ்ணா 50 : வாழ்த்திய ரஜினி

சினிமாவில் பாலகிருஷ்ணா 50 : வாழ்த்திய ரஜினி

தெலுங்கு சினிமாவின் மூத்த மற்றும் இன்றைய இளம் நடிகர்களுடன் போட்டி போட்டு ஹிட் படங்களை கொடுத்து வருபவர் பாலகிருஷ்ணா. சினிமாவிற்கு இவர் வந்து 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இதற்காக திரையுலகினர், ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். நடிகர் ரஜினியும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட வீடியோவில், ‛‛பாலகிருஷ்ணா என்றாலே பாசிட்டிவிட்டி தான். அவர் பேசும் பன்ச் வசனங்களை அவரை தவிர வேறு யார் பேசினாலும் சிறப்பாக இருக்காது. பாலையா எங்கு இருந்தாலும் சிரிப்பும், மகிழ்ச்சியும் இருக்கும். அவருக்கு போட்டி அவர் தான். அவர் படம் நன்றாக ஓடுகிறது என்றால் அவரது ரசிகர்கள் மட்டுமல்ல, அனைத்து நடிகர்களின் ரசிகர்களும் மகிழ்ச்சி அடைவார்கள். அதுவே அவரது பலம். சினிமாவில் 50 ஆண்டுகளை நிறைவு செய்த உங்களுக்கு வாழ்த்துகள்'' என தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !