உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சமோசா மீது எனக்கு தனி லவ் : தமன்னா

சமோசா மீது எனக்கு தனி லவ் : தமன்னா

பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவை சில ஆண்டுகளாக காதலித்து வந்த தமன்னா சில மாதங்களுக்கு முன்பு அவரை பிரேக் அப் செய்து விட்டார். அவரைப்பற்றி மீடியா பேட்டிகளில் கேட்கப்படும் கேள்விகளை தவிர்த்து வரும் தமன்னா, தான் அளித்துள்ள ஒரு பேட்டியில் தனக்கு சமோசா மீது மிகப்பெரிய லவ் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

அதுகுறித்து அவர் கூறுகையில், ‛‛டீ, காபியுடன் சமோசாவை சேர்த்து சாப்பிட்டால் ரொம்ப சூப்பராக இருக்கும். ஒரே நேரத்தில் ஐந்து சமோசாக்கள் வரை நான் சாப்பிட்டு விடுவேன். அதிலும் உருளைக்கிழங்கில் செய்யப்பட்ட சமோசாக்கள் என்றால் எனக்கு ரொம்ப பிடிக்கும். முக்கியமாக சினிமா தியேட்டர்களுக்கு செல்லும்போது சமோசாக்களை அடிக்கடி சாப்பிடுவேன். அதன் மீது எனக்கு அப்படியொரு தனி லவ் என்று தெரிவித்துள்ளார் தமன்னா.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !