உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஜெயிலர் 2 பற்றி ஓவராக பேசி ஹைப் ஏற்ற விரும்பவில்லை : நெல்சன்

ஜெயிலர் 2 பற்றி ஓவராக பேசி ஹைப் ஏற்ற விரும்பவில்லை : நெல்சன்

ரஜினி நடிப்பில் ஜெயிலர் படத்தை இயக்கியவர் நெல்சன். அந்த படம் 600 கோடி வசூலித்தது. அதையடுத்து ரஜினி நடித்த வேட்டையன் பெரிதாக வசூலிக்காத நிலையில், தற்போது கூலி படம் 500 கோடிக்கு மேல் வசூலித்திருக்கிறது. இந்த நிலையில் மீண்டும் நெல்சன் இயக்கும் ஜெயிலர் 2 படத்தில் தற்போது நடித்து வருகிறார் ரஜினி. வேட்டையன் படத்தில் பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் நடித்த நிலையில், கூலி படத்தில் அமீர்கான் நடித்திருந்தார். இந்த நிலையில் இந்த ஜெயிலர்-2 படத்தில் பாலிவுட் நடிகை வித்யாபாலன் இணைந்திருக்கிறார்.

இந்நிலையில் ஜெயிலர் -2 படம் குறித்து ஒரு விழாவில் இயக்குனர் நெல்சன் கூறும்போது, ‛‛ஜெயிலர் படத்தைப் போலவே ஜெயிலர் 2 படமும் மிகச் சிறப்பாக வந்துள்ளது. என்றாலும் இந்த படம் எப்படிப்பட்டதாக இருக்கும் என்று இப்போதே என்னால் எதுவும் சொல்ல முடியாது. ஆனால் கண்டிப்பாக ரசிகர்களுக்கு பிடித்தமான படமாக இருக்கும். முக்கியமாக இப்போதே ஜெயிலர் 2 படம் குறித்து ஓவராக ஹைப்பை ஏற்றி பேச விரும்பவில்லை. ஏற்கனவே ஜெயிலர் 2 படம் குறித்து ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இந்த நேரத்தில் நானும் இன்னும் ஹைப்பை ஏற்றும் வகையில் பேச வேண்டாம் என்று நினைக்கிறேன். அப்படி நானும் பேசினால் படத்திற்கான எதிர்பார்ப்பு இன்னும் அதிகரித்து விடும்'' என்று கூறினார் .


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் (3)

angbu ganesh, chennai
2025-09-01 16:30:05

யப்பா முருகா அணிலின் எடுபிடியே நீ கூலி வாங்கிட்டு பொய் விமர்சனம் சொல்ற மொக்க


முருகன்
2025-08-31 19:12:34

கூலியில் கிடைத்த அடி அப்படி


விநாயகன்
2025-09-01 11:44:04

பூனை கண்ணை மூடினால் உலகம் இருண்டுவிடாது. சீப்பை ஒளித்து வைத்தால் கல்யாணம் நினறுவிடாது. அணில் காக்கை கூட்டம் கெடுக்க நினைத்தாலும் வெற்றியை தடுக்க முடியாது.