மோகன்லால், பஹத் பாசிலை பின்னுக்குத் தள்ளிய கல்யாணி பிரியதர்ஷன்
2025 ஓணம் பண்டிகையை முன்னிட்டு மலையாளத்தில் கடந்த வாரம் ஆகஸ்ட் 28ம் தேதி மோகன்லால் நடித்த 'ஹிருதயபூர்வம்', கல்யாணி பிரியதர்ஷன் நடித்த 'லோகா சாப்டர் 1 சந்திரா', ஆகிய படங்களும், 29ம் தேதி ஹிருது ஹாரூன் நடித்த 'மைனே பியார் கியா', பஹத் பாசில் நடித்த 'ஓடும் குதிர சாடும் குதிர' ஆகிய படங்களும் வெளிவந்தன.
முன்னணி நடிகர்களான மோகன்லால், பகத் பாசில் ஆகியோரை பின்னுக்குத் தள்ளி கல்யாணி பிரியதர்ஷன் வசூலில் முந்தியுள்ளார். அவர் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்த 'லோகா சாப்டர் 1 சந்திரா' படம் வார இறுதியில் 25 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது. மோகன்லால் நடித்த 'ஹிருதயபூர்வம்' படம் 12 கோடியும், பஹத் பாசில் நடித்த 'ஓடும் குதிர சாடும் குதிர' படம் 5 கோடிக்குக் குறைவாகவும் வசூலித்துள்ளது.
இதன் மூலம் மலையாளத் திரையுலகத்தில் தனக்கென ஒரு தனி வெற்றியைத் தேடிக் கொண்டுள்ளார் கல்யாணி. மற்ற மொழிகளிலும் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த வாரம் ஓணம் பண்டிகை நாட்கள் என்பதால் இந்தப் படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.