வீர தீர சூரன்- 2 படத்திற்கு பிறகு மூன்று படங்களில் கமிட்டான விக்ரம்!
ADDED : 45 days ago
அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் நடித்த 'வீர தீர சூரன்' படத்தின் இரண்டாம் பாகம் கடந்த மார்ச் 27ம் தேதி வெளியானது. இந்த படத்தில் விக்ரமுடன் எஸ்.ஜே. சூர்யா, துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தார்கள். இந்த நிலையில் அடுத்தபடியாக 'மண்டேலா, மாவீரன்' படங்களை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்கும் தனது 63வது படத்தில் நடித்து வரும் விக்ரம், அந்த படத்தை தொடர்ந்து '96, மெய்யழகன்' படங்களை இயக்கிய பிரேம்குமார் இயக்கும் தனது 64வது படத்தின் நடிக்கப் போகிறார்.
இந்த இரண்டு படங்களையும் முடித்துவிட்டு அடுத்தபடியாக வேல்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடிக்கப் போகிறார். இந்த படத்தை தற்போது நயன்தாரா, கவின் நடித்துவரும் 'ஹை' என்ற படத்தை இயக்கி வரும் விஷ்ணு எடவன் என்பவர் இயக்கப் போகிறார்.