ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது புத்திசாலித்தனம்! இயக்குனர் லோகேஷ் கனகராஜ்
ரஜினி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் திரைக்கு வந்துள்ள 'கூலி' படம் 500 கோடி வசூலித்துள்ளது. இந்த நிலையில் அடுத்தபடியாக அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ஹீரோவாக நடிக்க அவர் தயாராகி வருகிறார்.
இந்நிலையில் தான் கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியில் மாணவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார் லோகேஷ் கனகராஜ். அப்போது அவரிடத்தில் ஏஐ தொழில்நுட்பம் குறித்து மாணவர்கள் கேட்ட கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், இளைஞர்கள் சினிமா பார்த்துதான் வாழ்க்கையை கற்றுக் கொள்ள வேண்டும் என்று நினைத்தால் அது தவறு. சினிமா நம்மை இன்ப்ளுயன்ஸ் செய்தால் நாம் வளர்ந்த விதமே தவறாகி போகும்.
மேலும், சினிமாவில் ஏஐ தொழில்நுட்பத்தின் ஆதிக்கம் அதிகமாக இருக்காது. ஆனால் இந்த டெக்னாலஜியை பயன்படுத்திக் கொள்ளலாம். தேவையான அளவு ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்திக் கொள்வது புத்திசாலித்தனம். டெக்னாலஜி வளர்ந்து விட்ட இந்த காலகட்டத்தில் அதை எந்த அளவுக்கு நாம் பயன்படுத்திக் கொள்கிறோம் என்பது நம்முடைய செயல்பாட்டில் தான் உள்ளது என்று தெரிவித்திருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.