நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி பேரன் மனஸ் மானு சினிமாவுக்கு வருகிறார்
ADDED : 46 days ago
நடிகர் 'வெண்ணிற ஆடை' மூர்த்தி தமிழ் சினிமாவில் சீனியர் நடிகர். அவர் வயது 89. இவர் 1965ல் நடிக்க தொடங்கினார். 60 ஆண்டுகளை சினிமாவில் நிறைவு செய்துள்ளார். 'இட்லி' படத்துக்குபின் நடிக்காமல் ஓய்வெடுத்து வருகிறார். இவர் நடிகை மணிமாலாவை திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு ஒரே மகன். இப்போது அமெரிக்காவில் உயர் பதவியில் இருக்கிறார்.
இப்போது வெண்ணிற ஆடை மூர்த்தி பேரன் மனஸ் மானு சினிமாவில் அறிமுகம் ஆக உள்ளார். அமெரிக்காவில் படித்தாலும் அவர் நன்றாக தமிழ் பேசக்க்கூடியவர். முறைப்படி கராத்தே பயின்றவராம். அவர் நடிக்கும் படம் குறித்த அறிவிப்பு விரைவில் வருகிறது.