உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 50 ஆண்டு கொத்தடிமை,, தஞ்சை பின்னணியில் நடக்கும் கதை

50 ஆண்டு கொத்தடிமை,, தஞ்சை பின்னணியில் நடக்கும் கதை


‛அங்காடித்தெரு' படத்தின் மூலம் நடிகரான மகேஷ், ‛திருக்குறள்' படத்தில் நடித்த குணா பாபு இணைந்து நடிக்கும் படம் ‛தடை அதை உடை'. பட்டுக்கோட்டை அறிவழகன் முருகேசன் இயக்குகிறார். படம் குறித்து அவர் பேசுகையில், ‛‛தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை தாலுகாவில் 50 ஆண்டுகளாக கொத்தடிமையாக இருந்த ஒருவரின் கதை இது. தன்னந்தனியாக போராடி தன் வம்சத்தை கல்விக்கு திருப்பிய உண்மைக்கதையை சொல்கிறோம். சமகாலத்தில் சோசியல் மீடியா, கல்வி மற்றும் அரசியலில் நேரடியாகவும் மறைமுகமாகவும் செய்யும் மாற்றங்கள் மக்களை எப்படி பாதிக்கிறது என்பதையும் காண்பிக்கிறோம். தஞ்சையின் பண்பாடு, மக்கள் மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றை புது கோணத்தில் வெளிப்படுத்துகிறோம். இரண்டு நேர்-எதிர் காலங்களில் நடப்பதாலும், நிறைய நடிகர்கள் உருவமாற்றம் செய்ய வேண்டி இருந்ததாலும் இரண்டரை ஆண்டுகள் படப்பிடிப்பு நடத்தினோம்'' என்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !