உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில் வசனம் இல்லாமல் வெளியாகும் ‛உப் யே சியாபா'

ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில் வசனம் இல்லாமல் வெளியாகும் ‛உப் யே சியாபா'


லவ் பிலிம்ஸ் வழங்கும் லவ் ரஞ்சன் மற்றும் அங்கூர் கார்க் தயாரிப்பில் ‛பாகமதி, துர்காமதி' படங்களை இயக்கிய ஜி. அசோக் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் உப் யே சியாபா. நாளை (செப்டம்பர் 5) உலகம் முழுவதும் வெளியாகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். நடிகர்கள் சோஹம் ஷா, நுஷ்ரத் பருச்சா, நோரா பதேஹி, ஓம்கார் கபூர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இத்திரைப்படம் நகைச்சுவை, த்ரில்லர் படமாக உருவாகியுள்ளது. ஆனால் ஆச்சரியப்படும் விஷயம் என்னவென்றால் படத்தில் எந்தவொரு வசனமும் இல்லையாம். எந்த வசனங்களும் இல்லாமல் நகைச்சுவை மற்றும் ஏ.ஆர். ரஹ்மானின் இசையை மட்டும் நம்பி எடுக்கப்பட்டிருக்கிறது.

படம் பற்றி ரஹ்மான் கூறியதாவது: இந்த படத்தில் பணிபுரிவது சவாலானதாகவும், சுதந்திரமாகவும் இருந்தது. பெரும்பாலான படங்களில், வசனங்கள் முன்னுரிமை பெறுகின்றன, இசை ஒரு படி பின்வாங்குகிறது. ஆனால் இங்கே, இசையே கதையின் ஒரு பகுதி. புதிய பாணிகளைப் பரிசோதிப்பதை நான் உண்மையிலேயே ரசித்தேன், குறிப்பாக இந்த நகைச்சுவை-த்ரில்லர் வகை படமாக இருந்தது கூடுதல் சவாலாகவும் இருந்தது. லவ் ரஞ்சன் மற்றும் இயக்குனர் அசோக்குடன் பணிபுரிவது மகிழ்ச்சியாக இருந்தது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !