மேலும் செய்திகள்
நடிகை காஜல் அகர்வால் குறித்து தீயாய் பரவும் வதந்தி
15 hours ago
அமீர்கான் படத்தை கைவிட்டாரா லோகேஷ் கனகராஜ்
15 hours ago
ஒருவழியாக, நானும், ரஜினிகாந்தும் இணைவது உறுதி என்று அறிவித்துவிட்டார் கமல்ஹாசன். துபாயில் நடந்த தனியார் நிகழ்ச்சியில் அந்த கூட்டணி குறித்து கமல் அதிகாரப்பூர்வமாக அறிவித்தாலும், அந்த மேடையில் இயக்குனர் யார் என்பதை சொல்லவில்லை. லோகேஷ்தான் இயக்கப்போகிறார் என்று கூறப்படுகிறது. ஆனாலும் ஏன் கமல்ஹாசன் அவர் பெயரை சொல்லவில்லை, மேடை பேச்சில் மறந்தாரா? அல்லது வேறு இயக்குனரை தேடுகிறாரா என்ற சந்தேகம் பலருக்கு ஏற்பட்டுள்ளது.
'கூலி' படம் குறித்து சமீபத்தில் பேசிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூட இந்த படம் குறித்து வெளிப்படையாக அறிவிக்கவில்லை. அடுத்து அவர் ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்கப்போகிறார். அதற்கடுத்து 'கைதி 2'வை இயக்கப்போகிறார் என்று செய்திகள் வரும் நிலையில், அடுத்த ஆண்டுதான் ரஜினி, கமல் இணையும் படம் உருவாகுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
கமல் இப்போது எந்த படத்திலும் நடிக்கவில்லை. சண்டை இயக்குனர்களான அன்பறிவ் இயக்கும் படத்தில் நடிக்கப்போகிறார் என்கிறார்கள். அடுத்த ஆண்டு தொடக்கம் முதல் சட்டசபை தேர்தல், பிரசாரத்தில் கவனம் செலுத்தப்போகிறார். ரஜினிகாந்த் இந்த ஆண்டு இறுதிக்குள் 'ஜெயிலர் 2' படத்தை முடித்துவிட்டு ஓய்வெடுக்கப்போகிறார். ஆகவே, அடுத்த ஆண்டு மே மாதத்துக்கு பின்னர்தான் இந்த படம் தொடங்க வாய்ப்பு என்று ஒரு தரப்பு சொல்கிறார்கள். அதற்குள் அந்த பட இயக்குனர் யார் என்பதை ரஜினி அல்லது கமல் முறைப்படி அறிவிக்க வேண்டும் என்று இரண்டு தரப்பு ரசிகர்களும் எதிர்பார்க்கிறார்கள்.
15 hours ago
15 hours ago