மேலும் செய்திகள்
பிளாஷ்பேக் : முதல் நட்சத்திர வில்லன்
17 minutes ago
புகழ் நடிக்கும் '4 இடியட்ஸ்'
17 minutes ago
சினிமா நிகழ்ச்சிகளை புறக்கணிக்கும் ஸ்ரீகாந்த்
17 minutes ago
சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற சின்னத்திரை நடிகர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் அறிமுக விழா சென்னையில் நடந்தது. இந்த விழாவில் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பரத், செயலாளர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ரவிந்தர், பொருளாளரக தேர்ந்தெடுக்கப்பட்ட கற்பகவல்லி மற்றும் இதர நிர்வாகிகளான வசந்த், சிவக்கவிதா, ஆதித்யா, தேவானந்த், பிரேமி, ஈஸ்வர் ரகுநாதன், ரஞ்சன், உள்ளிட்டோர் அறிமுகப்படுத்தப்பட்டு கவுரவிக்கப்பட்டனர்.
சிறப்பு விருந்தினர்களாக நடிகர் சங்க துணை தலைவர் பூச்சி முருகன், டப்பிங் யூனியன் தலைவர் ராதாரவி, இயக்குநர் சங்க துணை தலைவர் பேரரசு, பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி, எஸ்.வி.சேகர், சின்னத்திரை கூட்டமைப்பு தலைவர் மங்கை அரிராஜன், சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கத் தலைவர் சுஜாதா விஜயகுமார், எம்ஜிஆர் பல்கலைகழக நிறுவனர் ஏ.சி.சண்முகம் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
17 minutes ago
17 minutes ago
17 minutes ago