உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பேனர் வைக்க விடாமல் தடுத்தது யார்? மனம் திறப்பாரா கேபிஒய் பாலா

பேனர் வைக்க விடாமல் தடுத்தது யார்? மனம் திறப்பாரா கேபிஒய் பாலா


கேபிஒய் பாலா நடிப்பில் கடந்த வாரம் வெளியான படம் 'காந்திகண்ணாடி'. இந்த படம் குறித்து பேசியுள்ள இயக்குனர் ஷெரிப். 'காந்திகண்ணாடி படத்துக்கு பேனர் வைக்க விடவில்லை. எங்களுக்கு தியேட்டர் பிரச்னை. நாங்கள் சினிமா கனவுடன் வந்தவர்கள், எங்களை புறக்கணிக்கிறார்கள். எங்களை துரத்தி அடிக்கிறார்கள். அது யார் என்று தெரியவில்லை. எங்களை நேரில் அழைத்து 2 அடி கொடுங்க, இப்படி மறைமுகமாக அடிக்காதீங்க' என்று பொங்கியுள்ளார். இந்த பேச்சு வைரல் ஆகியுள்ளது.

யார் தடுக்கிறார்கள் என இயக்குனர் வெளிப்படையாக சொல்லவில்லை. ஆனால், ஏதோ பிரச்னை என தெரிகிறது. தனது செயல்களால் பாலாவுக்கு நல்ல பெயர். அவர் ஹீரோவாகும் படத்தை தடுப்பது யார்? பேனர் வைக்கவிடாமல் தடைபோடுவது யார்? விரைவில் இது குறித்து பாலா மனம் திறப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !