மேலும் செய்திகள்
நடிகை காஜல் அகர்வால் குறித்து தீயாய் பரவும் வதந்தி
12 minutes ago
மதராஸி - காந்தி கண்ணாடி படங்களின் மூன்று நாள் வசூல் எவ்வளவு?
12 minutes ago
தெலுங்குத் திரையுலகத்தில் கடந்த வாரம் அனுஷ்கா நடித்த 'காட்டி', மவுலி தனுஜ் பிரசாந்த், ஷிவானி நகரம் மற்றும் பலர் நடித்த 'லிட்டில் ஹார்ட்ஸ்' ஆகிய படங்கள் வெளிவந்தன. இவற்றில் 'காட்டி' படத்தை விட 'லிட்டில் ஹார்ட்ஸ்' படத்திற்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்தன. தற்போது தெலுங்குத் திரையுலகத்திலும் அப்படம் பாராட்டுக்களைப் பெற்று வருகிறது.
படம் குறித்து நடிகர் நானி, “லிட்டில் ஹார்ட்ஸ்' எவ்வளவு கலகலப்பான, வேடிக்கையான படம் ! நீண்ட நாட்களுக்குப் பிறகு மனமார ரசித்தேன். அகில், மது, காத்யாயணி (எழுத்து சரியா இருக்கானு தெரியல). நீங்க எல்லாரும் என் நாளை அழகாக்கிட்டீங்க. நான் உங்களை காதலிக்கிறேன்னு சொல்ல மாட்டேன், ஆனா இப்போதைக்கு 'நன்றி'னு மட்டும் சொல்றேன்,” எனப் பாராட்டியுள்ளார்.
தமிழ் சினிமாவில் இந்த வருடம் 'டூரிஸ்ட் பேமிலி' என்ற சிறிய படத்தைக் கொடுத்து தெலுங்கு திரையுலகினரையும் பாராட்ட வைத்து அப்படத்தின் இயக்குனர் அபிஷன் ஜீவிந்த், 'லிட்டில் ஹார்ட்ஸ்' பற்றி, “லிட்டில் ஹார்ட்ஸ் பார்த்தேன். நண்பர்கள் மற்றும் குடும்பத்துடன் சேர்ந்து ரசிக்க ஏற்ற அழகான, வேடிக்கை நிறைந்த படம்,” எனப் பாராட்டியுள்ளார்.
மூன்று நாட்களில் இப்படம் 12 கோடி வசூலித்துள்ளது. ஒவ்வொரு நாளும் வசூல் கூடி வருகிறது.
12 minutes ago
12 minutes ago