உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நாஞ்சில் விஜயன் மீது திருநங்கை பாலியல் புகார்

நாஞ்சில் விஜயன் மீது திருநங்கை பாலியல் புகார்

சின்னத்திரையில் காமெடி நிகழ்ச்சிகள், மற்றும் தொடர்கள் மூலம் புகழ் பெற்றவர் நாஞ்சில் விஜயன். இவர் மீது சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்த திருநங்கை வைஷூலிசா சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பாலியல் புகார் கொடுத்துள்ளார். இவரும் சின்னத்திரையில் நடித்து வருகிறவர்.

அவர் கொடுத்துள்ள புகார் மனுவில் கூறப்பட்டிருப்பதாவது: நான் 15 ஆண்டுகளாக சின்னத்திரையில் நடித்து வருகிறேன். நானும், சின்னத்திரை நடிகர் நாஞ்சில் விஜயனும் 5 ஆண்டுகளாக காதலித்து வந்தோம். என்னை திருமணம் செய்து கொள்வதாக நம்பிக்கை அளித்தார். இதனால் நாங்கள் இருவரும் கணவன், மனைவி போன்று வாழ்ந்து வந்தோம். தற்போது திருமணம் செய்து கொள்ள மறுத்து வருகிறார். அவர் அளித்த உறுதிமொழியின் அடிப்படையிலேயே அவரது ஆசைக்கு இணங்கி வந்தேன். நான் திருநங்கை என்பது தெரிந்துதான் அவர் என்னை காதலித்தார். நான் தற்போது மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பாதிக்கப்பட்டு அதற்கான சிகிச்சை பெற்று வருகிறேன். என்னை ஏமாற்றிய நாஞ்சில் விஜயன் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு புகார் மனுவில் அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !