மேலும் செய்திகள்
நாஞ்சில் விஜயன் மீது திருநங்கை பாலியல் புகார்
5 minutes ago
'கருடன்' ரீமேக் தோல்வி ஏன் ? நாயகன் விளக்கம்
5 minutes ago
அண்டங்களுக்கு இடையே நடக்கும் போரை பற்றியது 'ஸ்டார் வார்ஸ்'. வெளி கிரக உயிரினத்திற்கும் மனிதர்களுக்கு நடக்கும் போர் 'ஏலியன்ஸ்'. இயந்திர மனிதர்களுக்கும், நிஜ மனிதர்களுக்கும் இடையில் நடக்கும் போர் 'ரோபோ'. இந்த வரிசையில் டிஜிட்டல் உலகத்திற்கும், நிஜ உலகத்திற்கும் இடையிலான போரை பற்றிய படம் 'ட்ரான்'.
1982ம் ஆண்டு 'ட்ரான்' படம் வெளியானது. இதன் இரண்டாவது பாகம் 'ட்ரான் : லெகசி' என்ற பெயரில் 2010ம் ஆண்டு வெளியானது. தற்போது இதன் மூன்றாம் பாகம் 'ட்ரான் : ஏரெஸ்' என்ற பெயரில் தயாராகி உள்ளது. இந்த படம் நாளை (10ம் தேதி) வெளியாகிறது. இந்தியாவில் ஆங்கிலத்துடன் தமிழ், ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளிலும் வெளியாகிறது.
ஜோச்சிம் ரோனிங் இயக்கியுள்ள இந்தப் படத்தில் ஜாரெட் லெட்டோ, கிரேட்டா லீ, இவான் பீட்டர்ஸ், ஹசன் மின்ஹாஜ், ஜோடே டர்னர்-ஸ்மித், ஆர்டுரோ காஸ்ட்ரோ, கேமரூன் மோனகன், கில்லியன் ஆண்டர்சன் மற்றும் ஜெப் பிரிட்ஜஸ் ஆகியோர் நடித்துள்ளனர். சீன் பெய்லி, ஜெப்ரி சில்வர், ஜஸ்டின் ஸ்பிரிங்கர், ஜாரெட் லெட்டோ, எம்மா லுட்புரூக் மற்றும் ஸ்டீவன் லிஸ்பெர்கர் ஆகியோர் படத்தைத் தயாரித்துள்ளனர்.
5 minutes ago
5 minutes ago