உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / இரண்டாவது வாரத்தில் 'மதராஸி', லாபம் கிடைக்குமா ?

இரண்டாவது வாரத்தில் 'மதராஸி', லாபம் கிடைக்குமா ?

ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், சிவகார்த்திகேயன், ருக்மிணி வசந்த் மற்றும் பலர் நடிப்பில் கடந்த வாரம் வெளியான படம் 'மதராஸி'. இப்படத்திற்கு விமர்சன ரீதியாக வரவேற்பு கிடைத்தது. அது போல இரண்டு நாளில் 50 கோடி வசூலையும் கடந்தது. தற்போது 75 கோடி வசூலைக் கடந்திருக்கும் என பாக்ஸ் ஆபீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, இப்படம் 100 கோடி வசூலைக் கடந்தாலும் லாபம் கொடுக்க வாய்ப்பில்லை என்ற ஒரு தகவலைச் சொல்கிறார்கள். இப்படத்திற்கான பட்ஜெட் 150 கோடிக்கும் அதிகமாம். அது சிவகார்த்திகேயன் படங்களின் சராசரி வசூலை விட அதிகம். இப்படத்திற்கு உலக அளவில் சுமார் 75 கோடிக்கு வியாபாரம் நடந்துள்ளது. அதற்கு குறைந்தது 125 கோடி வசூலையாவது பெற வேண்டுமாம். அப்போதுதான் படத்திற்கு லாபம் வரும் என்கிறார்கள்.

தற்போது வரை சுமார் 50 சதவீத வசூல் கிடைத்துள்ளது. இன்னும் 50 சதவீத வசூல் கிடைக்க வேண்டும். அடுத்த ஓரிரு நாட்களில் 10 சதவீதம் வரை கிடைக்கலாம். அதுபோக இன்னும் 40 சதவீதம் வேண்டும். அடுத்த வார நாட்களில் அது நடக்க வாய்ப்பில்லை. இதனால், ஒட்டு மொத்த தியேட்டர் வசூல் மூலம் நஷ்டம் வரும் என்றும் சொல்கிறார்கள். அதனால், இந்தப் படம் வசூல் ரீதியாக ஏஆர் முருகதாஸுக்கு 'கம்பேக்' படம் இல்லை. அடுத்த சூப்பர்ஹிட்டிற்கு அவர் காத்திருக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் (1)

முருகன்
2025-09-12 16:18:29

இதற்கு படு தோல்வி படம் என சொல்லிவிடலாம்