தள்ளி வைக்கப்பட்ட ரவி மோகனின் தனி ஒருவன் 2
2015ம் ஆண்டில் மோகன் ராஜா இயக்கத்தில் ரவி மோகன், அரவிந்த்சாமி, நயன்தாரா நடிப்பில் வெளியான படம் தனி ஒருவன். சூப்பர் ஹிட் அடித்த இந்த படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பு கடந்த 2023ம் ஆண்டில் ஒரு வீடியோவுடன் வெளியிடப்பட்டது. என்றாலும் அப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் தொடங்கப்படவில்லை.
தனி ஒருவன் -2 படம் குறித்து இயக்குனர் மோகன் ராஜா இடத்தில் ஒரு விருது விழாவில் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், இந்த படம் குறித்து தயாரிப்பாளர் அர்ச்சனா காப்பாத்தியுடன் சமீபத்தில் பேச்சுவார்த்தை நடத்தினேன். அப்போது தனி ஒருவன்- 2 படத்தின் பட்ஜெட் காரணமாக இந்த படத்தை தயாரிப்பதற்கு இது சரியான நேரம் அல்ல. தற்போதைய சூழலில் தமிழ் சினிமாவின் நிலை இன்னும் மேம்படட்டும். ஆனால் இந்த படத்தை கண்டிப்பாக நாம் தயாரிப்போம் என்று கூறியிருக்கிறார். அதன் காரணமாகவே இப்படத்தின் படப்பிடிப்பு சில காலம் தள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் கண்டிப்பாக படப்பிடிப்பு நடக்கும் என்கிறார் மோகன் ராஜா.