அக். 31க்கு திரைக்கு வரும் ‛ஆண் பாவம் பொல்லாதது'
ADDED : 49 days ago
நடிகர் ரியோ ராஜ், 'ஜோ' படத்தின் வெற்றிக்குப் பிறகு 'ஸ்வீட் ஹார்ட், நிறம் மாறும் உலகில்' ஆகிய படங்களில் நடித்திருந்தார். ஆனால், இந்த படங்கள் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை.
தற்போது அறிமுக இயக்குனர் கலையரசன் தங்கவேல் இயக்கத்தில் 'ஆண் பாவம் பொல்லாதது' என்கிற புதிய படத்திலும் நடித்துள்ளார். டர்ம்ஸ்டிக் புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு சித்து குமார் இசையமைத்துள்ளார். இதில் மாளவிகா மனோஜ், விக்னேஷ்காந்த், ஷீலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த நிலையில் இத்திரைப்படம் வருகின்ற அக்டோபர் 31ம் தேதியன்று திரைக்கு வருகிறது என இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.