பிளாஷ்பேக் : 3 மொழிகளில் ஆதிக்கம் செலுத்திய சி.ஆர்.ராஜகுமாரி
ADDED : 49 days ago
தமிழ் சினிமாவில் முதல் நட்சத்திர நாயகி டி.ஆர்.ராஜமாரி. இவரது காலத்திலேயே ஏராளமான படங்களில் நடித்தவர் சி.ஆர்.ராஜகுமாரி. தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு மொழிகளில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
அவர் நடித்த பெரும்பாலான படங்கள் ஹீரோயின் சப்ஜெக்ட் படங்களாகவே இருந்தது. ‛ராஜகுமாரி, லைலா மஜ்னு, வனசுந்தரி, ராஜாம்பாள்,லாவண்யா, ராணி, மதனமோகினி, மோகினி, நல்ல தங்கை, மனைவியே மனிதரில் மாணிக்கம்' உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்தார். பின்னர் ரீ எண்ட்ரி கொடுத்து பட்டிக்காடா பட்டணமா, இமைகள், மனதில் உறுதி வேண்டும்போன்ற பல படங்களில் நடித்தார்.