உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பவன் கல்யாண் படத்திற்கு சலுகைகளை அள்ளி வழங்கிய ஆந்திர அரசு

பவன் கல்யாண் படத்திற்கு சலுகைகளை அள்ளி வழங்கிய ஆந்திர அரசு


தெலுங்கில் முன்னணி நடிகரும், ஆந்திராவின் துணை முதல்வருமான பவன் கல்யாண் நடித்துள்ள 'ஓ.ஜி' என்ற படம் வருகிற 25ம்தேதி வெளியாக இருக்கிறது. இந்தப் படத்திற்கு ஆந்திர அரசு பல சலுகைகளை வாரி வழங்கி இருக்கிறது. இது பொதுமக்களிடம் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

ஆந்திர முழுவதும் நள்ளிரவு 1 மணி சிறப்பு காட்சிக்கு அனுமதி, படத்தின் முதல் 10 நாட்களுக்கு திரையரங்குகளில் 5 காட்சிகள் வரை திரையிடலாம். சிறப்பு காட்சி அல்லாத பிற காட்சிகளுக்கும் டிக்கெட் விலையை ஆயிரம் ரூபாய் வரை உயர்த்திக் கொள்ளலாம் என்பன உள்ளிட்ட பல சலுகைகளை அறிவித்திருக்கிறது. இதற்கு முன் பவன் கல்யாண் நடிப்பில் வெளியான 'ஹரிஹரவீரமல்லு' படம் பெரிய தோல்வி அடைந்ததால் இந்த படத்தை பெரிய வெற்றிப் படமாக காட்டவே இந்த சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 250 கோடியில் தயாராகி உள்ள இந்த படத்தை ஆயிரம் கோடி வசூல் படமாக்க திட்டமிட்டிருப்பதாகவும் தெரிகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !