உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அசுரனாக நடிக்கும் எஸ்.ஜே.சூர்யா

அசுரனாக நடிக்கும் எஸ்.ஜே.சூர்யா


'ஹனுமான்' படம் மூலம் சூப்பர் ஹீரோ படங்களை அறிமுகப்படுத்திய பிரசாந்த் வர்மா தற்போது அடுத்தகட்டமாக 'ஆதிரா' என்ற பேண்டஸி கதையை எழுதியுள்ளார். இதனை அவரது உதவியாளர் கரன் கொப்பி செட்டி இயக்குகிறார். தயாரிப்பாளர் கல்யாண் தேசாரி ஹீரோவாக அறிமுகமாகிறார். சிவேந்திர தாசரதி ஒளிப்பதிவு செய்கிறார், ஸ்ரீ சரண் பகலா இசை அமைக்கிறார்.

ஆர்கேடி ஸ்டுடியோஸ் சார்பில் ரிவாஸ் ரமேஷ் துக்கல் தயாரிக்கும் இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா அசுரன் வேடத்தில் நடிக்கிறார். புராணங்களில் இருந்து கதாபாத்திரங்கள் எடுக்கப்பட்டு இன்றைய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாகிறது. இந்தாண்டு இறுதியில் படத்தை திரைக்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !