சக்தித் திருமகன், காந்தி கண்ணாடி வெற்றியா
கடந்த சில மாதங்களாக தமிழில் வந்த எந்த படமும் பெரியளவில் வெற்றி பெறவில்லை. கோடிக்கணக்கில் லாபத்தை சம்பாதித்துக் கொடுக்கவில்லை. ஆனாலும், சமீபத்தில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த மதராஸி குழுவினர் பார்ட்டி வைத்து வெற்றியை கொண்டாடியிருக்கிறார்கள். அந்த அளவுக்கு வெற்றி படமா என்று விசாரித்தால், படம் எதிர்பார்த்த வசூலை கொடுக்கவில்லை. 100 கோடி வசூலை ஈட்டி இருப்பதால் அந்த மகிழ்ச்சியை கொண்டாடியிருக்கிறார்கள் என்கிறார்கள்.
விஜய் ஆண்டனி நடித்த சக்தித் திருமகன் படத்துக்கு சிறப்பான விமர்சனங்கள் வரவில்லை. ஆனால், தமிழகம், ஆந்திராவில் படம் ஓரளவு வசூலை ஈட்டி இருக்கிறது. தியேட்டர், வினியோகஸ்தர்களுக்கு லாபம் இல்லாவிட்டாலும், தயாரிப்பாளராக விஜய் ஆண்டனி சில கோடி லாபம் பார்த்துவிட்டார்கள் என்கிறார்கள்.
கேபிஓய் பாலா நடித்த காந்தி கண்ணாடி படத்துக்கும் ஓரளவு வரவேற்பு. ஆனால், படம் வெற்றியா? நல்ல லாபமா என்பதை தயாரிப்பாளர்தான் அறிவிக்க வேண்டும். அவருக்கு மட்டுமே உண்மையான வரவு செலவு தெரியும். சின்ன பட்ஜெட் படம் என்பதால் நஷ்டமடைய வாய்ப்பில்லை என்கிறார்கள்.