வாசகர்கள் கருத்துகள் (1)
usually vijay tv programs anchors are like this vanitha in the past also if some one is active in fb news or some bad news viral then they will get a chance in vijay tv programs..
நடிகர், தயாரிப்பாளர், சமையல் கலை நிபுணர், டிவி செலிபிரிட்டி என பல முகங்களை கொண்டவர் மாதம்பட்டி ரங்கராஜ். 'ஏற்கெனவே திருமணமான இவர் தன்னை திருமணம் செய்வதாக கூறி தன்னோடு இரண்டு வருடங்கள் வாழ்ந்ததாகவும், தன் வயிற்றில் வளரும் குழந்தைக்கு அவர்தான் தந்தை' என்றும் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா குற்றம் சாட்டினார். இது தொடர்பாக கமிஷனர் அலுவலத்தில் புகார் அளித்தார்.
தனது புகார் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி, முதல்வர் ஸ்டாலினுக்கு தனது 'எக்ஸ்' சமூக வலைதள பக்கம் மூலமாக கோரிக்கை வைத்தார்.
இந்தநிலையில் சென்னை ஆயிரம் விளக்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு அலுவலகத்தில் ஜாய் கிரிசில்டா நேற்று ஆஜரானார்.
காலை 11 மணி முதல் 6 மணி நேரம் அவரிடம் விசாரணை நடந்தது. விசாரணையில் மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை ஏமாற்றி திருமணம் செய்து கர்ப்பமாக்கியது குறித்த ஆதாரங்களை அவர் சமர்ப்பித்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும்போது, எனக்கும் என் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கும் நீதி வேண்டும். இந்த பாவம் மாதம்பட்டி ரங்கராஜை சும்மா விடாது. அவர் மீது நிச்சயம் போலீசார் நடவடிக்கை எடுப்பார்கள். எனக்கு நம்பிக்கை இருக்கிறது'', என்றார்.
மாதம்பட்டி ரங்கராஜிடம் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்காக அவருக்கு விரைவில் சம்மன் அனுப்பி ஓரிரு நாளில் விசாரணை நடத்த பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
usually vijay tv programs anchors are like this vanitha in the past also if some one is active in fb news or some bad news viral then they will get a chance in vijay tv programs..