உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / காதலன் காதலியாக மாற... : காதலி காதலனாக மாற...

காதலன் காதலியாக மாற... : காதலி காதலனாக மாற...

ஜி.வி.பெருமாள் இயக்கத்தில் இந்த வாரம் வெளி வர இருக்கும் படம் சரீரம். தர்ஷன், சார்மி ஆகியோர் நடித்து இருக்கிறார்கள். காதல், பெற்றோர்கள் எதிர்ப்பு, நண்பர்கள் துணையுடன் ஊரை விட்டு ஓடிப்போய் திருமணம் செய்ய நினைக்கிறார்கள் என்ற வழக்கமான கதை என்றாலும், ஒரு கட்டத்தில் கதையில் புதுமை செய்து இருக்கிறார் இயக்குனர். அதாவது, எதிர்ப்பு காரணமாக மாமல்லபுரத்தில் தஞ்சம் அடிக்கிறது காதல் ஜோடி. அங்கேயும் அடியாட்கள் அவர்களை துரத்த, நம்மால் நிம்மதியாக வாழ முடியாது, ஏதாவது செய்யணும் என்று காதலர்கள் முடிவெடுக்கிறார்கள். தங்கள் அடையாளத்தை மாற்ற நினைத்து ஹீரோ பிரியன் பெண்ணாக மாறவும், ஹீரோயின் ஆணாக மாறவும் நினைக்கிறார்கள். இதற்காக, டாக்டர் உதவியுடன் ட்ரீட்மென்ட், ஆபரேசன் செய்ய நினைக்கிறார்கள்.

முதற்கட்டமாக இருவரும் உருவ அளவில் மாறுகிறார்கள். ஹீரோயினுக்கு மீசை வளர்கிறது, அவர் ஓட்டல் வேலைக்கு சேருகிறார். அந்த ஓட்டலுக்கு வரும் அப்பாவால் கூட மகளை அடையாளம் கண்டுபிடிக்க முடியாத மாற்றம். ஹீரோ பெண்தன்மைக்கு மாறி பெட்ரோல் பங்கில் பணியாற்றுகிறார். அவரை பெண் என நினைத்து சிலர் டார்ச்சர் செய்கிறார்கள். கடைசியில் அந்த காதல் என்னவானது என்ற ரீதியில் கதை செல்கிறது. இப்படிப்பட்ட காதல் கதை தமிழ் சினிமாவில் வந்தது இல்லை. நிஜ திருநங்கைகள் பலர் இந்த படத்தில் நடித்து இருக்கிறார்கள். சரீரம் என்றால் உடல் என அர்த்தம். காதலுக்காக தங்கள் உடலையே மாற்ற நினைக்கும் காதலர்களுக்கு என்ன நடக்கிறது என்பது கதை என்கிறார் இயக்குனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !