'காந்தா சாப்டர் 1 டிரைலர்' : கன்னடத்தை விட ஹிந்தியில் அதிக வரவேற்பு
ரிஷப் ஷெட்டி இயக்கம், நடிப்பில் அக்டோபர் 2ம் தேதி வெளியாக உள்ள கன்னடத் திரைப்படம் 'காந்தாரா சாப்டர் 1'. பான் இந்தியா வெளியீடாக வர உள்ள இந்தப் படத்தின் டிரைலர் நேற்று ஐந்து மொழிகளில் வெளியானது.
டிரைலருக்கு எதிர்பார்த்ததை விடவும் அதிக வரவேற்பு உள்ளது. குறிப்பாக கன்னடத்தை விட ஹிந்தியில் மும்மடங்கு வரவேற்பு இருக்கிறது. கன்னட டிரைலர் யு டியுப் தளத்தில் இதுவரையில் 12 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது. ஆனால், ஹிந்தி டிரைலர் 25 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. தெலுங்கு டிரைலர் 13 மில்லியன் பார்வைகளையும், தமிழ் டிரைலர் 9 மில்லியன் பார்வைகளையும் கடந்துள்ளது. மலையாள டிரைலர் 5 மில்லியனையும் நெருங்கியுள்ளது.
அனைத்து டிஜிட்டல் தளங்களிலும் சேர்த்து 107 மில்லியன் பார்வைகளை அனைத்து மொழி டிரைலர்கள் கடந்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் தற்போது அறிவித்துள்ளது.
டிரைலர் வரவேற்பைப் பார்த்தால் படத்திற்கான வரவேற்பும் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.