மேலும் செய்திகள்
அக்., 1ல் ஓடிடியில் வெளியாகும் மதராஸி
1 days ago
சின்ன வயது கஷ்டங்களை சொல்லும் தனுஷ்
1 days ago
கிடா சண்டையை மையமாக கொண்டு உருவாகும் ஜாக்கி
1 days ago
சகு பாண்டியன் இயக்கத்தில் ரத்தன் மவுலி, யாஷிகா ஆனந்த், விஜய் டிவி புகழ் யோகி, தேஜா ஸ்ரீ, சஞ்சய் ஷங்கர் மற்றும் பலர் நடிக்கும் திரைப்படம் 'டாஸ்'. கவர்ச்சி நடிகையாக, ஒரு பாட்டுக்கு ஆடுபவராக, இரண்டாவது ஹீரோயினாக நடித்து வந்த யாஷிகா இந்த படத்தில் கதை நாயகியாக நடிக்கிறார்.
படம் குறித்து இயக்குனர் கூறுகையில் ''மர்மமான முறையில் மூன்று கொலைகள் நிகழ்கின்றன. அந்த கொலைகளின் பின்னணி என்ன? யாஷிகா ஆனந்துக்கும், கொலைகளுக்கும் என்ன தொடர்பு என்பதை சொல்லும் கிரைம் திரில்லர் படம் டாஸ். யாஷிகாவுடன், தெலுங்கு திரையுலகில் இருந்து வந்திருக்கும் தேஜாஸ்ரீ இன்னொரு நாயகியாக நடிக்கிறார். கோவில்பட்டி, விருதுநகர், சாத்தூர் பகுதிகளில் ஒரே கட்டமாக 25 நாட்களில் படப்பிடிப்பை முடிக்க திட்டமிட்டிருக்கிறோம். இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் படம் ரிலீஸ்'' என்கிறார்.
ஒரு கட்டத்தில் பல படங்களில் நடித்து வந்த யாஷிகாவுக்கு மாமல்லபுரத்தில் நடந்த விபத்து, தோழி உயிரிழப்பு காரணமாக மார்க்கெட் டல் ஆனது குறிப்பிடத்தக்கது.
1 days ago
1 days ago
1 days ago