உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தேசிய விருது : தன் சாதனையை முறியடித்த குட்டி தேவதைக்கு கமல் வாழ்த்து

தேசிய விருது : தன் சாதனையை முறியடித்த குட்டி தேவதைக்கு கமல் வாழ்த்து

71வது தேசிய திரைப்பட விருதுகள் டில்லியில் இருதினங்களுக்கு முன் வழங்கப்பட்டன. ஜிவி பிரகாஷ், எம்எஸ் பாஸ்கர், ஊர்வசி, ஷாரூக்கான், ராணி முகர்ஜி, ராம்குமார் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பல மாநில திரைக்கலைஞர்கள் ஜனாதிபதி கையால் தேசிய விருது பெற்றனர். மலையாள நடிகரான மோகன்லாலுக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.

‛நாள் 2' என்ற மராட்டிய படத்திற்காக திரிஷா தோஷர் என்ற 4 வயது குழந்தை, ஜனாதிபதி திரவுபதி முர்மு கையால் தேசிய விருது பெற்றார். அவர் வயதுக்கு ஏற்ற சேலை அணிந்து வந்து விருது பெற்றார். ஒட்டுமொத்த அரங்கமே அவரை பார்த்து வியந்தது. இந்நிலையில் இந்த குட்டி தேவதைக்கு நடிகரும், எம்பி.,யுமான கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கமல் வெளியிட்ட பதிவில், ‛‛என்னுடைய 6 வயதில் முதல் தேசிய விருதை வென்றேன். அந்த சாதனையை முறியடித்த திரிஷா தோஷருக்கு மனம் நிறைந்த பாராட்டுகள். நீங்கள் இன்னும் பல தூரம் செல்ல வேண்டும் மேடம். தொடர்ந்து உங்கள் திறமையை வளர்க்க பாடுபடுங்கள். உங்கள் குடும்பத்தில் உள்ள மூத்தவர்களுக்கும் என் பாராட்டுகள்'' என குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !