உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'இட்லி கடை' படத்தின் நீளம் குறித்து தகவல் இதோ!

'இட்லி கடை' படத்தின் நீளம் குறித்து தகவல் இதோ!


நடிகர் தனுஷ் இயக்கி, நடித்து வரும் படம் 'இட்லி கடை'. டான் பிக்சர்ஸ், வுண்டர்பார் பிலிம்ஸ், ரெட் ஜெயண்ட் பிலிம்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
அருண் விஜய், ராஜ்கிரண், நித்யா மேனன், ஷாலினி பாண்டே, பார்த்திபன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அக்டோபர் ம் தேதியன்று இப்படம் திரைக்கு வருகிறது.

இந்த படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கியுள்ளதால் இந்த படத்திற்கான புரமோஷன் நிகழ்ச்சிகள் மதுரை, திருச்சியில் நடைபெறுகிறது. ஏற்கனவே இந்த படத்திற்கு யு சான்றிதழ் தந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளனர். தற்போது இந்த படம் 2 மணி நேரம் 28 நிமிடங்கள் கொண்ட படமாக வெளியாகவுள்ளது என்ற தணிக்கை சான்றிதழ் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் (1)

தியாகு, கன்னியாகுமரி
2025-09-26 13:59:42

சமீப காலங்களில் தனுஷின் செய்கைகளில் மிதமிஞ்சிய செயற்கைத்தனம் அப்பட்டமாக தெரிகிறது. அதை பார்க்கும் நமக்கு அருவருப்பாகவும் இருக்கிறது.