உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / துபாயில் சொகுசு கப்பலா... : மாதவன் கொடுத்த விளக்கம்

துபாயில் சொகுசு கப்பலா... : மாதவன் கொடுத்த விளக்கம்

டெஸ்ட் படத்திற்கு பிறகு தமிழில் அதிர்ஷ்டசாலி என்ற படத்தில் நடித்து முடித்து இருக்கிறார் மாதவன். இந்த நிலையில் அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், துபாயில் வசித்து வரும் தனக்கு சொந்தமாக கப்பல் ஒன்று இருப்பதாக வெளியாகி ஒரு செய்தி குறித்து ஒரு விளக்கம் கொடுத்திருக்கிறார்.

அதில், துபாயில் எனக்கு சொகுசு கப்பல் ஒன்று இருப்பதாக தொடர்ந்து ஊடகங்களில் செய்தி வெளியாகி வருகிறது. ஆனால் எனக்கு இருப்பது ஒரு சின்ன போட் மட்டுமே. அவர்கள் சொல்லும் கப்பல் இந்த சிறிய போட்டுதான். இதன் விலை 16 கோடி ரூபாய் என்று தெரிவித்திருக்கும் மாதவன், சினிமாவில் நடித்த சம்பாதித்ததில் மும்பை மற்றும் துபாயில் சில சொத்துக்களை வாங்கி இருக்கிறேன். ரியல் எஸ்டேட்டில் நான் செய்த முதலீடு எனக்கு பெரிய அளவில் கை கொடுத்திருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !