குடும்பத்துடன் குலதெய்வம் கோவிலில் தரிசனம் செய்த தனுஷ்
ADDED : 50 days ago
தனுஷ் இயக்கிய படங்களில் ராயன் படம் 150 கோடி வரை வசூல் செய்தது. தற்போது அவர் இயக்கி நடத்திருக்கும் இட்லி கடை படத்திற்கும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அக்டோபர் 1ம் திரைக்கு வரும் இந்த படத்தின் பிரமோஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும், தனது ஒவ்வொரு படங்களும் திரைக்கு வருவதற்கு முன்பு தேனியில் உள்ள தனது குலதெய்வம் கோயிலுக்கு குடும்பத்துடன் சென்று சாமி தரிசனம் செய்வதை வாடிக்கையாக வைத்திருக்கிறார் தனுஷ். தற்போது இட்லி கடை ரிலீசுக்கு முன்பாகவும் குடும்பத்துடன் குலதெய்வம் கோவிலில் வழிபாடு செய்திருக்கிறார். தனது பெற்றோர், மகன்கள் மற்றும் சகோதரிகளுடன் அவர் குலதெய்வம் கோயிலில் வழிபாடு செய்த வீடியோ வெளியாகியிருக்கிறது.